ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விதிகளை மீறிய 9,874 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விதிகளை மீறிய 9,874 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
X

சாலை விதிமீறல் - ஓட்டுநர் உரிமம் ரத்து (மாதிரிப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் விதிகளை மீறியதாக 9,874 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் விதிகளை மீறியதாக 9,874 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டன. குறிப்பாக சாலை விதி மீறல்கள் தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 1,76,940 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 கோடியே 11 லட்சத்து 15 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

11,637 ஒட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரபோக்குவரத்து அலுவலங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதில், 9,874 ஒட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும் 2024ம் ஆண்டில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் மீது 8,006 அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சாலை வாகன விபத்து வழக்குகளில் 2,396 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் 2,214 வழக்குகளாக குறைக்கபட்டு சாலை விபத்துகள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வெகுவாக சாலை விபத்துகள் குறைக்கபட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!