ஈரோடு: 24.54 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -சுகாதாரத்துறையினர் தகவல்
X
By - S.Gokulkrishnan, Reporter |13 Dec 2021 5:30 PM IST
ஈரோடு மாவட்டத்தில் 24.54 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல்.
ஈரோடு மாவட்டத்தில் 14 கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி மொத்தம் 24 லட்சத்து 54 ஆயிரத்து 232 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu