கோபிசெட்டிபாளையம் அருகே காரை முந்த முயன்று விபத்து: வாலிபர் காயம்

கோபிசெட்டிபாளையம் அருகே காரை முந்த முயன்று விபத்து: வாலிபர் காயம்
X

பைல் படம்

பாரியூரில் காரை முந்த முயன்ற இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு பேருந்தினுள் விழுந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பாரியூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து வளைவில் திரும்பியது. அப்போது,கோபியை நோக்கி வந்த காரை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனத்தில் வந்த, சின்னகுளத்தை சேர்ந்த ஜெகன் என்பவர், பேருந்து வருவதை கவனிக்கவில்லை. இதனால், ஜெகன் அரசு பேருந்தின் மீது மோதாமல் இருக்க இடது பக்கமாக, இருசக்கர வாகனத்தை திரும்பியுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனம் காரின் மீது மோதி, பின்பு பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஜெகன் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு பேருந்தினுள் விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார், பேருந்தின் வலது பக்கத்தில் மோதி தாறுமாறாக ஓடி சாலையோர வேலிக்குள் புகுந்தது. காரில் ஏர் பேக்குகள் ஓபன் ஆனதால்,காரில் வந்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த கோபிசெட்டிபாளையம் போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெகனை கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால், கோபி - அந்தியூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்