பவானி அருகே பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

பவானி அருகே பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி பலி
X

பள்ளி வாகனம் மோதியதில், இருசக்கர வாகனம் கீழே கிடப்பதை படத்தில் காணலாம்.

பவானி அருகே பள்ளி வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூரைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் கிருஷ்ணன் (45). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர், தனது இரு சக்கர வாகனத்தில் மூலப்பாளையத்திலிருந்து காளிங்கபாளையம் நோக்கி மாலை சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனமும், இரு சக்கர வாகனமும் எதிர்பாராமல் மோதிக் கொண்டன. இதில், பலத்த காயமடைந்த கிருஷ்ணன், பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சித்தோடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
what can we expect from ai in the future