ஆன்லைன் மோசடியில் ரூ.13.41 லட்சத்தை இழந்த ஈரோடு வாலிபர்

ஆன்லைன் மோசடியில் ரூ.13.41 லட்சத்தை இழந்த ஈரோடு வாலிபர்
X

ஆன்லைனில் பண மோசடி (பைல் படம்).

ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆன்லைன் மோசடியில் ரூ.13.41 லட்சத்தை இழந்துள்ள நிலையில், இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆன்லைன் மோசடியில் ரூ.13.41 லட்சத்தை இழந்துள்ள நிலையில், இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு கதிரம்பட்டி மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 35). இவரிடம், ஆன்லைன் மூலம் பொருட்களை விற்றால் கமிஷன் தருவதாக சமூக வலைதளத்தில் அறிமுகமான நபர் ஒருவர் கூறியுள்ளார்.

இதை நம்பிய இவரும் ,அதற்கு உரிய பொருள் வந்ததும் அதை விற்று கமிஷன் பெற்றார். பின்னர் கூடுதல் தொகையை செலுத்தி பொருட்கள் வாங்கி அதை விற்று கமிஷன் பெற்றுள்ளார். முறையாக கமிஷன் கிடைப்பதால் நந்தகுமார், சமூக வலைதள நபரை நம்பி ரூ.13 லட்சத்து 41 ஆயிரத்து 434 வரை வங்கி கணக்கு மூலம் செலுத்தியுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் பொருளும் வரவில்லை. கமிஷனும் கிடைக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நந்தகுமார் இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரின் வங்கி கணக்கு. சமூக வலைதள கணக்கு விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story