ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது!

ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது!
X

கைதான பிரேம்குமார்.

ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் சொக்கநாதபாளையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகளும், குழந்தைகளும் உள்ளனர். இவர் ஈரோட்டில் உள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தார்.

அப்போது, ஈரோட்டில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியை பிரேம்குமார் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேம்குமாரை நேற்று கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story