பவானி அருகே உதவி செய்வது போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்

பவானி அருகே உதவி செய்வது போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்
X

சித்தோடு காவல் நிலையம்.

பவானி அருகே மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து 6 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 82). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். சம்பவத்தன்று இவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அவர் பின்னால் வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து கீழே 100 ரூபாய் நோட்டுகள் விழுந்து விட்டதாக கூறி முத்தம்மாளிடம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நான் உங்களுடன் வீட்டுக்கு வந்து உதவி செய்கிறேன் என்று கூறி அந்த பெண் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டு வேலைகளை செய்வது போல் வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகை, ரூ .60 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடி சென்று விட்டார்.

பின்னர், நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் சித்தோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!