அந்தியூர் அருகே பர்கூர் சாலையில் உலா வந்த காட்டு யானை!

அந்தியூர் அருகே பர்கூர் சாலையில் உலா வந்த காட்டு யானை!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலையில் காட்டு யானை உலா வந்தது.

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலையில் காட்டு யானை உலா வந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதியில் இருந்து ஆண் யானை ஒன்று வெளியேறி வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிக்கு வந்தது.

இதையடுத்து அந்த யானை அங்குள்ள பர்கூர் சாலையில் உலா வந்தது. யானையை கண்டதும், அந்த வழி யாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

Next Story