அந்தியூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை: மரக்கிளையை முறித்து தின்றது

அந்தியூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை: மரக்கிளையை முறித்து தின்றது
X

சாலையில் உலா வந்த காட்டு யானை மரக்கிளையை முறித்து தின்று கொண்டிருந்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை, மரக்கிளையை முறித்து தின்றது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் அருகே உள்ள மலைக்கிராமம் துருசனாம்பாளையம். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தின் வழியாக மைசூர் சாலை செல்கிறது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை நேற்று மைசூர் ரோட்டுக்கு வந்தது. பின்னர் சாலையோரம் இருந்த மரத்தின் கிளையை முறித்து காட்டு யானை தின்றது.

இதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களு டைய வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி கொண்டனர். மேலும் சிலர் தங்களுடைய செல்போனில் காட்டு யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

சிறிது நேரம் வரை மரக்கிளையை தின்று கொண்டிருந்த யானை பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story
Similar Posts
அம்மாபேட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்: தமாகாவினர் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு
ஈரோட்டில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி முதன்மை செயலாளர் ஆய்வு
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் அசத்தல்
சென்னிமலையில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்கம்
சென்னிமலையில் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ஈரோட்டில் ஓய்வு பெற்ற மருந்து கிடங்கு அலுவலர் நலச்சங்கம் கூட்டம்
முதல்வர் பிறந்த நாளில் நல உதவிகள்
ராசிபுரத்தில் முதுநிலை தட்டச்சு தேர்வு
நாமகிரிப்பேட்டையில் சடலத்தை புதைக்கும் போது பரபரப்பு
இயற்கை பண்ணையில் பயிற்சி முகாம்
எலச்சிபாளையத்தில் கோவிலில் மோதல் – 5 பேர் மீது வழக்கு