அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை
X

தாமரைக்கரை - மணியாச்சி சாலையில் தாளக்கரை பிரிவில் சாலையில் உலா வந்த காட்டு யானையை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள தாமரைக்கரை மலைப்பகுதி சாலையில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள தாமரைக்கரை மலைப்பகுதி சாலையில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இதில் யானைகள் அடிக்கடி பர்கூர் மலைப்பாதைக்கு வந்துவிடுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு என்பது வாடிக்கையாகிவிட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் தாமரைக்கரையில் இருந்து மணியாச்சி செல்லும் சாலையில் தாளக்கரை பிரிவு என்ற இடத்தில் மலைப்பாதையில் ஒரு காட்டு யானை உலா வந்தது.

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானையை கண்டதும் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொண்டனர். சிலர் வாகனங்களில் இருந்தபடியே தங்களுடைய செல்போனில் யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சுமார் 30 நிமிடம் யானை மலைப்பாதையிலேயே உலாவியது. பிறகு காட்டுக்குள் சென்றது.

அதன் பின்னரே, வாகனங்கள் சென்றன. காட்டு யானையால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!