ஈரோடு : சிவகிரி அருகே கருமாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசநோய் கண்டறியும் முகாம்

ஈரோடு : சிவகிரி அருகே கருமாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசநோய் கண்டறியும் முகாம்
X
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த கொளாநல்லி கருமாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

சிவகிரி அடுத்த கொளாநல்லி கருமாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி வட்டாரம் கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்குட்பட்ட கருமாண்டம்பாளையத்தில் உள்ள பிரிசிசன் பேப்ரிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காசநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மெரினா கார்மெண்ட்ஸ் தலைவர் சண்முகசுந்தரம், மேலாளர் தண்டபாணி, நிர்வாக மேலாளர் நித்யா சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தொழிலாளர்கள் 400 பேருக்கு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவின் மூலமாக நெஞ்சக ஊடுகதிர் மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சிவகிரி வட்டார காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாலகுமார் செய்திருந்தார். இதில், சுகாதார ஆய்வாளர் தங்கவேல், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் 400 பேர்கள் கலந்து கொண்டனர்.

‌மேலும், இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Next Story