அந்தியூர்: குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்!

அந்தியூர்: குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 23) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 23) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை வட்டாரம் குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன்பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காச நோயினால் பாதிக்கப்பட்டவருடன் வசிப்போர் சிஓய்டிபி பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதின் அவசியம்,நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு, புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள், உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்பு சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு, அன்புமணி, மருத்துவ அலுவலர்கள் மரு.திவ்யா, மரு.மேகலா,மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, ,காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயசேகர், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர் , செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 70 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story
Similar Posts
அந்தியூர்: குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்!
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
காலை பள்ளிக்கு சென்ற மாணவன் காணவில்லை
கல்யாண் சில்க்ஸில் கோடைக்கால காட்டன் ஷோ
விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கவனத்திற்கு
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி
பாரத மாதா கோயில் என பெயர் சுட்ட பாஜகவினர் வலியுறுத்தல்
சாய்பாபா பாதுகைக்கு கோலாகல வரவேற்பு
சேலத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு
அரசு கலைக்கல்லுாரியில், முன்னாள் மாணவர் சந்திப்பு
அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு சுவர் தேவை என மக்கள் கோரிக்கை
மொபட்டை திருடியவர் கைது
பெண் தொழிலாளிக்கு குடிபோதையில் தொல்லை கொடுத்த  நபர் கைது