ஈரோடு: அம்மாபேட்டையில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்!

ஈரோடு: அம்மாபேட்டையில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்!
X
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் மற்றும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 24) நடைபெற்றது.

அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் மற்றும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 24) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் வட்டாரம் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் மற்றும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன்பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோய் பாதித்தவருடன் வசிப்போர் சிஓய்டிபி பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதின் அவசியம், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்பாடுகள், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


மேலும், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு, தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகள் அதன் பாதிப்புகள், தொழு நோய்க்கான ஆரம்ப நிலை சிகிச்சையால் தவிர்க்கப்படும் அங்க ஹுனங்கள், தொழுநோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், தொழுநோயற்ற சமுதாய உருவாக்கத்தில் மக்களின் பங்கு குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் , மருத்துவ அலுவலர்கள் மரு. புவியரசு, மரு. தினேஷ்குமார், வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மூர்த்தி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயசேகர், சுகாதார ஆய்வாளர்கள் ஜெகதேஷ் குமார், ஸ்ரீநாத்,பகுதி சுகாதார செவிலியர்கள்ள செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் மற்றும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story