ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் (பைல் படம்).
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு கடந்த ஜன.7ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாடு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பழைய கட்டிடம்) முதல் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் 0424-2267674, 0424-2267675, 0424-2267679 மற்றும் 9600479643 தொலைபேசி எண்களிலும், 1800-425-0424 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும், பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா சேவை எண் 1950ஐ தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu