பவானி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் மற்றும் கார்.

பவானி அருகே கோவில் பண்டிகைக்கு ராட்டினம் அமைக்க இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூரைச் சேர்ந்தவர் ரவி மகன் நவீன் (19). ராட்டினம் அமைக்கும் தொழிலாளி. இவர் கேசரிிமங்கலத்தில் கோவில் பண்டிகைக்கு ராட்டினம் அமைக்க தனது நண்பர் அருண் (21) என்பவருடன் பவானி - மேட்டூர் ரோட்டில் இன்று மாலை இருசக்கர சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வரதநல்லூரை அடுத்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது மேட்டூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் பைக் மீது எதிர்பாராமல் மோதியது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற நவீன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அருண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்விபத்து காரணமாக பவானி-மேட்டூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future