ஈரோட்டில் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் கொண்டாடிய டீக்கடைக்காரர்

ஈரோட்டில் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் கொண்டாடிய டீக்கடைக்காரர்
X

நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி கொண்டாடிய குமார்.

ஈரோட்டில் கேக் வெட்டி கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கொண்டாடிய டீக்கடைக்காரர்.

ஈரோட்டில் கேக் வெட்டி கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கொண்டாடிய டீக்கடைக்காரர்.

பிரபல நடிகர்களின் பிறந்தநாள் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாளை அவர்களது ரசிகர்கள் ஆதரவாளர்களும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் 64வது பிறந்த நாளை டீக்கடைக்காரர் ஒருவர் கொண்டாடி இருக்கிறார்.

ஈரோடு அகில் மேடு வீதியில் பிரியா டீ ஸ்டால் டீ கடை நடத்தி வருபவர் குமார். இவர் நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் ஒவ்வொரு ஆண்டும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை டீக்கடை குமார் வெகு விமர்சியாக கொண்டாடினார்.

அதில் வருடம் தோறும் கொண்டாடுவது போல் இன்றி இந்த ஆண்டு கர்ப்பிணி பெண்களை அழைத்து அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கியதோடு கேக் வெட்டியும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார். கவர்ச்சி நடிகை என்றும் பாராமல் சில்க் ஸ்மிதாவுக்கு டீக்கடைக்காரர் பிறந்தநாள் விழா கொண்டாடிய நிகழ்வு இணையவாசிகள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!