அந்தியூர் அருகே கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்
விபத்துக்குள்ளான லாரியை படத்தில் காணலாம்.
அந்தியூர் அருகே கரும்பு லாரி கவிழ்ந்த விபத்தில், டிரைவர், கிளீனர் படுகாயமடைந்தனர்.
கர்நாடகா மாநிலம் ராமாபுரத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த அன்பு (வயது 39) என்பவர் ஓட்டினார். கிளீனராக வெங்கடாசலம் (49) இருந்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் அன்பு, கிளீனர் வெங்கடாசலம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாற்று லாரி வரவழைக்கப்பட்டு கரும்பு பாரம் அதில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu