தாளவாடி அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தற்கொலை!

தாளவாடி அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தற்கொலை!
X
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாளவாடி அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள மல்குத்திபுரம் தொட்டியை கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். தொழிலாளி. இவரது மகள் ஜோதி (15). இவர் தாளவாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியிருந்தார்.

நேற்று தேர்வு முடிவு வெளியானதில் மாணவி ஜோதி தேர்ச்சி பெற்று 500-க்கு 307 மதிப்பெண்கள் பெற்றார். இருப்பினும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மனமுடைந்த ஜோதி இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story