மொடக்குறிச்சியில் சிறுதானிய உணவுத் திருவிழா!

மொடக்குறிச்சியில் சிறுதானிய உணவுத் திருவிழா!
X

சிறந்த படைப்புகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் பரிசினை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் யோகா நிகழ்ச்சி புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் யோகா நிகழ்ச்சி புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை மற்றும் ஈரோடு மனவளக்கலை மன்றம் இணைந்து, சிறுதானிய உணவு திருவிழா மற்றும் யோகா நிகழ்ச்சியை மொடக்குறிச்சியில் உள்ள பிகேபி சாமி மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.

இந்த நிகழ்ச்சியினை, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் துவக்கி வைத்து பேசியதாவது, சிறுதானிய உணவினை தற்போதைய இளைய சமுதாயம் எவ்வாறு சிறுதானிய உணவுகளை உண்பதன் மூலம் தங்களது செயல்திறன் மேம்படும். மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த விழிப்புணர்வு மூலமாக மாணவ மாணவிகள் இதனை பிறருக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் சிறுதானிய உணவின் அவசியம் அனைவருக்கும் தெரியவரும், என்றார்.

தொடர்ந்து, பிகேபி பள்ளியின் முதல்வர் வைஜெயந்தி, நிர்வாக அலுவலர் லட்சுமணன், ஈரோடு மனவளக்கலை மன்றத்தின் பேராசிரியை விஜயலட்சுமி முருகேசன் ஆகியோர் சிறுதானியம் தொடர்பான விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர். மேலும், நிகழ்ச்சியில் மாணவிகள் சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள், பலகாரங்கள் மற்றும் பச்சை சிறுதானியங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியிருந்தனா். தொடா்ந்து யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

முடிவில் சிறந்த படைப்புகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை மொடக்குறிச்சி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் எட்டிக்கண் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

சிறுதானியங்களின் நன்மைகள்

சிறுதானியங்கள் என்பது அரிசி, கோதுமை போன்ற முக்கிய தானியங்களுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு ஊட்டச்சத்துகளைக் கொண்டவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன.

சிறுதானியங்களின் நன்மைகள் பின்வருமாறு:

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது: சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை செரிமானத்தை மெதுவாக்க உதவுகின்றன. இதனால், உடலில் கொழுப்பு தேங்குவது தடுக்கப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது: சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் பிற பொருட்கள் உள்ளன. இதனால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இருதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது: சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகின்றன. இதனால், இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது: சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை மலத்தை மென்மையாக்க உதவுகின்றன. இதனால், மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது: சிறுதானியங்களில் வைட்டமின் ஏ மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்கள் உள்ளன. இவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது: சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பை உறிஞ்சுவதை குறைக்க உதவுகிறது. இதனால், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

சிறுதானியங்கள் பல வகைகளில் கிடைக்கின்றன. அவற்றில் கம்பு, சோளம், வரகு, கேழ்வரகு, தினை, குதிரைவாலி போன்றவை முக்கியமானவை.

தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்துக்கொள்வதன் மூலம், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!