சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் திலீப் மகன் சுரேஷ் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் இவர் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் அரியப்பம்பாளையம் காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றான். பின்னர் ஆற்றில் இறங்கி நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தான்.

அப்போது, சுரேஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளான். மேலும், சுரேசுக்கு நீச்சல் தெரியாததால், எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினான். இதை பார்த்த நண்பர்கள் அங்கு சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று சுரேசின் உடலை கைப்பற்றினர்.

பின்னர், சுரேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Similar Posts
கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
மகளிர் தினத்தில் அமைச்சர் மதிவேந்தனின் பேச்சு
சித்த மருத்துவரை கத்தியுடன் மிரட்டி பணம் பறித்த 7 பேர் கைது
ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 220 கோரிக்கை மனுக்களை பெற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே தலைமை ஆசிரியர் பணியிடம்
ப.வேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை உயர்வு
காளியம்மன் கோவிலில் மகா குண்டம் மற்றும் ஊஞ்சல் உற்சவ விழா
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் ஆங்கில பயிற்சி
அந்தியூரில் வரட்டுப்பள்ளம் அணையில் 96.940 மில்லியன் கன அடி நீர் திறப்பு
நம்பியூர் பேரூராட்சியில் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மொடக்குறிச்சியில் இரண்டு பகுதி நேர ரேஷன் கடைகள்: அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்!
காவிரி ஆற்றின் பராமரிப்பு பணி, குடிநீர் வழங்கல் 22ம் தேதி வரை பாதிப்பு
சத்தியமங்கலம்: கடம்பூரில் அகில உலக பெண்கள் தினவிழா கொண்டாட்டம்