கோபி: நம்பியூர் அருகே இடி, மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த அரச மரம்!

கோபி: நம்பியூர் அருகே இடி, மின்னல் தாக்கி  தீப்பிடித்து எரிந்த அரச மரம்!
X
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் இடி, மின்னல் தாக்கியதில் அரச மரம் தீப்பிடித்து எரிந்தது.

கோபி அருகே உள்ள நம்பியூரில் இடி, மின்னல் தாக்கியதில் அரச மரம் தீப்பிடித்து எரிந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பட்டிமனிக்காரன்பாளையம், மீன்காரம்பாளையம், வேமாண்டபாளையம், குட்டகம், சூரிபாளையம், பொலவபாளையத்தில் நேற்று மாலை 1 மணி நேரம் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

இந்த மழையால் பட்டிமணியக்காரம்பாளையம் சின்னியந்தோட்டம் பகுதியில் இருந்த அரச மரத்தை இடி, மின்னல் தாக்கியது. அதில், அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. பின்னர், இதுகுறித்த தகவல் அடைந்ததும் நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Next Story