இடைத்தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பொது விடுமுறை

இடைத்தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பொது விடுமுறை
X

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அன்று பொது விடுமுறை அறிவிப்பு.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் அறிவிப்பாணைப்படி, இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5ம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதன்படி, அந்தத் தொகுதியில் உள்ள அரசின் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் பிப்ரவரி 5ம் தேதி மூடப்பட வேண்டும்.

அந்த தொகுதி அமைந்துள்ள ஈரோடு மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பணியாற்றும், ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களாக உள்ள பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா