கோபி: அக்கரை கொடிவேரி ஊராட்சியை பெரிய கொடிவேரி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கோபி: அக்கரை கொடிவேரி ஊராட்சியை பெரிய கொடிவேரி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
X

கோபிசெட்டிபாளையம்- சத்தியமங்கலம் முதன்மை சாலையில் அக்கரை கொடிவேரி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியை பெரிய கொடிவேரி பேரூராட்சியுடன் இணைக்க ஜன.1ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியை பெரிய கொடிவேரி பேரூராட்சியுடன் இணைக்க தமிழக அரசு கடந்த ஜன.1ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, கோபி - சத்தியமங்கலம் முதன்மை சாலையில் அக்கரை கொடிவேரி பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் ஊராட்சி தலைவர் சிவகுமார் தலைமையில் 100-க்கு மேற்பட்டோர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று (ஜன.4) சனிக்கிழமை ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கொடிவேரி ஊராட்சியை பெரிய கொடிவேரி பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, கோபி செட்டிபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு உடன்படாத அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது, மாலையில் விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!