கீழ்வாணி அருகே புளியமரத்தின் மீது பிக்கப் வேன் மோதி விபத்து

X
விபத்துக்குள்ளான பிக்கப் வேன்.
By - S.Gokulkrishnan, Reporter |22 Aug 2022 10:30 AM IST
Latest Accident News - கீழ்வாணி அருகே கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
Latest Accident News -ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி பழைய வேட்டி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பிக்கப் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, கீழ்வாணி இந்திராநகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் வலதுபுற சாலையோரமாக இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். உடன் பயணித்த மற்றோருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu