கோபியில் மறைந்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி
கோபியில் உள்ள தனியார் மண்டபத்தில் மறைந்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திறப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.
கோபியில் மறைந்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிச.14ம் தேதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையொட்டி, ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி கோபியில் உள்ள முத்து மஹாலில் நேற்று நடைபெற்றது.
ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.வி.சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் பழகியது குறித்து நினைவு கூர்ந்தார். இந்நிகழ்ச்சியில், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், கோபி நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், மாநில திமுக நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி மற்றும் அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu