கவுந்தப்பாடி புதூரில் மொபட்டில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

கவுந்தப்பாடி புதூரில் மொபட்டில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
X

பைல் படம்

கவுந்தப்பாடி புதூரில் மொபட்டில் மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி - ஆப்பக்கூடல் சாலையில் கவுந்தப்பாடி புதூர் பகுதியில் கவுந்தப்பாடி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த மொபட்டினை தடுத்து நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். அதில், அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சட்ட விரோதமாக மது விற்க முயன்றதாக கவுந்தப்பாடியை சேர்ந்த பூபதி (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்து, 20 மதுபாட்டில்கள் மற்றும் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!