கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி
X

தீயில் கருகி உயிரிழந்தவர்.

Fire Accident Today - கோபிசெட்டிபாளையம் அருகே சார்ஜ் போட்டு விட்டு தூங்கிய போது செல்போன் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

Fire Accident Today -ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூர் கூலைமூப்பனூரில் அர்ஜூனன் (34) என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது செல்போனை நேற்று இரவு சார்ஜ் போட்டுவிட்டு தூக்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்து சிதறியது. இதில், அர்ஜூனன் தங்கி இருந்த வீடு தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் அர்ஜூனன் தீயில் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து, சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது