ஈரோட்டில் ரயில் என்ஜின் டிரைவர் வீட்டில் 10 நாட்களாக தங்கி இருந்து சமைத்து சாப்பிட்டு, டி.வி-பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்!

ஈரோட்டில் ரயில் என்ஜின் டிரைவர் வீட்டில் 10 நாட்களாக தங்கி இருந்து சமைத்து சாப்பிட்டு, டி.வி-பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்!
X
ஈரோட்டில் ரயில் என்ஜின் டிரைவர் வீட்டில் டி.வி-பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர், 10 நாட்களாக தங்கி இருந்து சமைத்து சாப்பிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் ரயில் என்ஜின் டிரைவர் வீட்டில் டி.வி-பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர், 10 நாட்களாக தங்கி இருந்து சமைத்து சாப்பிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு ரயில்வே காலனி சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 52). இவர் ஈரோடு ரயில் நிலையத்தில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினர் கேரளா மாநிலத்தில் வசித்து வருகின்றனர். அனில் குமார் மட்டும் ரயில்வே காலனி குடியிருப்பில் தங்கி இருந்து அவ்வப்போது கேரளா சென்று குடும்பத்தினரை பார்த்து வந்துள்ளார்.

கடந்த மாதம் 23ம் தேதி அனில்குமார் ஈரோடு ரயில்வே காலநிலையில் உள்ள வீட்டை பூட்டி விட்டு கேரளா சென்று விட்டார். இந்நிலையில், நேற்று அனில்குமார் ஈரோடு ரெயில்வே காலனி வீட்டுக்கு வந்து வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். வீட்டுக்குள் இருந்த டி.வி, பிரிட்ஜ், பாத்திரங்கள் கட்டில் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு அதன் வழியாக மர்ம நபர் வந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அனில்குமார் வீட்டில் நுழைந்துள்ளார். 10 நாட்களாக வீட்டில் தங்கி வீட்டில் இருந்த மளிகை சாமான்களை வைத்து சமைத்து சாப்பிட்டு உள்ளார். பின்னர் வீட்டிலுள்ள பிரிட்ஜ், டிவி, கட்டில் உள்ளிட்ட ஒவ்வொரு பொருட்களையும் திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Similar Posts
பவானி அருகே கல்பாவியில் நாளை (மே.14) நடைபெற இருந்த மனுநீதி நாள் முகாம் 20ம் தேதிக்கு மாற்றம்!
2025-ல் டிஜிட்டல் பாசன கணக்கெடுப்பு தொடக்கம்– ஈரோட்டில் கலெக்டர் உரை!
கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் இன்ஜினியர்கள் போராட்டம்
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சமூக அக்கறை
ரயில்வே டிரைவரின் வீட்டில் திருட்டு – ஈரோட்டில் பரபரப்பு!
ஆதித்தமிழர் உரிமைக்காக திருச்செங்கோட்டில் தீர்மானக் கூட்டம்
ஈரோட்டில் ரயில் என்ஜின் டிரைவர் வீட்டில் 10 நாட்களாக தங்கி இருந்து சமைத்து சாப்பிட்டு, டி.வி-பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்!
உலக செவிலியர் தினம் – ஈரோடு அரசு மருத்துவமனையில் உற்சாக விழா!
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
முட்டை விலை மீண்டும் உயர்வு
1,000 பேருக்கு அன்னதானம்-பழனிசாமி பிறந்த நாள் விழா – பெருந்துறையில் பட்டாசு விழா போல கொண்டாட்டம்!
மல்லசமுத்திரத்தில் கொங்கு சங்கம் குடும்ப விழா
மொடக்குறிச்சி அருகே பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்ட அமைச்சர் சு.முத்துசாமி!