கோபி அருகே சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது!

கோபி அருகே சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது!
X
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோபி அருகே சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூர் தவடம்பாளையம் திருமலை நாயக்கர் வீதியில் கோபி மதுவிலக்கு போலீசாருக்கு ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சாராயம் காய்ச்சிய, திருப்பூர் மாவட்டம் பவானி குறுக்கு வீதியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 52) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் 50 லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா வாயிலாக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இதை ஏற்ற ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, சாராயம் காய்ச்சிய பழனிச்சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில், ஏற்கனவே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழனிச்சாமி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை கோபி மதுவிலக்கு போலீசார், கோவை சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Next Story