பங்களாப்புதூர் அருகே ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் முழ்கி உயிரிழப்பு

பங்களாப்புதூர் அருகே ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் முழ்கி உயிரிழப்பு
X

பைல் படம்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் முழ்கி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் நேரு தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 27). இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு, விஜயலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, தியானவர்ஷசன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் ஆகியோர் விக்னேஸ்வரனை விட்டுவிட்டு பிரிந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள பெரியாண்டவர் கோவில் திருவிழா நடப்பதால், விக்னேஸ்வரன் வீட்டை சுத்தம் செய்துவிட்டு, நஞ்சைபுளியம்பட்டி சங்கிலிமடுவு பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் முழ்கினார்.

இதையடுத்து பங்களாப்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!