அந்தியூர் வனப்பகுதியில் நோய் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!

அந்தியூர் வனப்பகுதியில் நோய் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் நோய் தாக்கி ஆண் யானை இறந்தது.

அந்தியூர் வனப்பகுதியில் நோய் தாக்கி ஆண் யானை இறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் மழை பெய்துள்ளதால் பசுந்தீவனங்களை தின்று, ஓடைகளில் யானைகள் தண்ணீர் பருகி வருகின்றன.

இந்தநிலையில், அந்தியூர் வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனஊழியர்கள் நேற்று காலை அந்தியூர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கொம்புதூக்கியம்மன் கோவில் பகுதியில் துர்நாற்றம் வீசியது. அதனால், அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர்.

அங்கு, ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடனே வனச்சரகர் முருகேசன் மாவட்ட வன அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சத்தியமங்கலம் கால்நடை டாக்டர் சதாசிவம் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அவர் கூறும்போது, இறந்தது சுமார் 12 வயதுடைய ஆண் யானை, நுரையீரலில் நோய் தாக்கி யானை இறந்துள்ளது என்றார்.

அதன்பின்னர், யானையின் உடலில் இருந்து தலா 1 மீட்டர் நீளமுள்ள 2 தந்தங்களையும் வனத்துறையினர் வெட்டி எடுத்தனர். பின்னர் மற்ற விலங்குகளுக்கு உணவாக யானையின் உடல் அங்கேயே விடப்பட்டது.

இந்தநிலையில், வெட்டி எடுக்கப்பட்ட தந்தங்கள் பத்திரமாக அந்தியூர் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

Next Story
Similar Posts
நவீன வசதிகளுடன் 103 ரெயில் நிலையங்கள் புதுப்பிப்பு – பிரதமர் மோடியின் அதிரடி திறப்பு!
சத்தியமங்கலத்தில் பொதுமக்களிடம் இருந்து 55 கோரிக்கை மனுக்களை பெற்ற ஈரோடு ஆட்சியா்!
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்!
ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 899 மனுக்கள் பெறப்பட்டன: நம்பியூரில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
தொடக்க கல்வியில் விதிமீறி ஊக்க ஊதிய உயர்வு பெற்ற விவகாரம்
ஈரோடு மாரியம்மன் திருக்கோவில் மேம்பாட்டிற்கு கோடி கணக்கில் நன்கொடை!
வாடகை காருடன் மாயமான இளைஞர் – சிசிடிவி வீடியோ மூலம் பிடிபட்டார்!
திருவிழா ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் நடந்த வன்முறை - அரிவாளால் தாக்கிய இளைஞர் கைது
தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து பரபரப்பு - அதிர்ச்சியில் பயணிகள்!
டாஸ்மாக் ஊழல் வெடிக்கிறது – ரூ.1,000 கோடிக்கு மோசடி!  ED-யின் அதிரடி அறிக்கை!
கரும்பு வருவாயில் பங்கு வழங்கப்படவில்லை – விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டு
பாலம் இல்லாமல் பள்ளிக்கூடம் செல்ல முடியாத குழந்தைகள்