ஈரோட்டில் வரும் மார்ச் 15ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 15ம் தேதி நடக்கிறது.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 15ம் தேதி ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார். இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட ஈரோடு, திருப்பூர். கோவை, சேலம், சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று 10.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 8675412356, 9499055942 என்ற எண்களின் வாயிலாகலோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும், முகாமில், கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்யவும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu