அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் பெயிண்ட் லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் பெயிண்ட் லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆந்திரா மாநிலம் விஜயநகரில் இருந்து மதுரைக்கு பெயிண்ட் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரிரநாயகிபுரத்தை சேர்ந்த சையது ஷேக் முகைதீன் (வயது 50) என்பவர் ஓட்டினார். கிளீனராக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெடுவாசல் கீழ் பாதியை சேர்ந்த காளிதாசன் (34) என்பவர் இருந்தார்.

இந்த நிலையில், லாரி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலையில் இன்று (மே.11) காலை வந்து கொண்டிருந்தது. அப்போது, வரட்டுப்பள்ளம் அணை காட்சி முனை பகுதி அருகே வந்த போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து இடது புறமாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர், கிளீனர் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

Next Story