பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: ஈரோடு மாவட்டத்துக்கு ஏப்ரல் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை!

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: ஈரோடு மாவட்டத்துக்கு ஏப்ரல் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை!
X
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 8ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 8ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. புகழ் பெற்ற இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி வழிபடுவார்கள்.

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு குண்டம் திருவிழா வருகிற 8ம் தேதி நடக்கிறது. இதனால், அன்று ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடு முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்காக வருகிற 8ம் தேதி அன்று ஈரோடு மாவட்டத் தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதே நேரம், கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களில் ஏற்கனவே தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. இந்த விடுமுறையானது விடுமுறை செலாவணி முறி சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.

மேலும், அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 26ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story