பண்ணாரி அருகே பகல் நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் பீதி

பண்ணாரி அருகே பகல் நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் பீதி
X

பண்ணாரி அருகே சாலையை கடந்து சென்ற சிறுத்தையை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே பகல் நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றது. இதனால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

பண்ணாரி அருகே பகல் நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றது. இதனால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியை கடந்து சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இந்த நெடுஞ்சாலை வழியாக தமிழகம் -கர்நாடகா இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக கடந்து செல்கின்றன.

இந்த மலைப்பாதையில் யானை, சிறுத்தை அதிக அளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக சிறுத்தைகள் 27 கொண்டை ஊசி வளைவுகள் பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று மதியம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓடியது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஓட்டி ஒருவர் இதனை பார்த்தார்.

உடனே, தனது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி அந்த சிறுத்தை சாலையை கடந்து ஓடிய காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர், அந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Next Story