சத்தியமங்கலம்: பண்ணாரி அருகே சாலையை கடந்து சென்ற சிறுத்தை!

சத்தியமங்கலம்: பண்ணாரி அருகே சாலையை கடந்து சென்ற சிறுத்தை!
X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றது. இதனால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றது. இதனால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் அடிக்கடி வெளியேறி பண்ணாரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றன.

இந்நிலையில், நேற்று பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓடியது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் இதனை பார்த்தார்.

உடனே, தனது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி அந்த சிறுத்தை சாலையை கடந்து ஓடிய காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர், அந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Next Story