குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலி

குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலி
X

பைல் படம்.

கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்தபோது குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஈரோடு அடுத்துள்ள பெரியசேமூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (52). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மாலை அங்குள்ள விவசாய தோட்டத்து கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இது குறித்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி முருகனின் உடலை மீட்டனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story