கோபி அருகே பன்றி குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில், விவசாயி படுகாயம்

கோபி அருகே பன்றி குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில், விவசாயி படுகாயம்
X

பைல் படம்

கோபி அடுத்த பங்களாப்புதூர் அருகே பன்றி குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் விவசாயி படுகாயமடைந்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள கொங்கர்பாளையம் அண்ணமார் கோயில் தெருவை சேர்ந்தவர் மோகனரங்கம் (58). இவர் இன்று அதிகாலை சமனாக்காடு தோட்டத்தில் உள்ள மாட்டில் பால் கரப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வாணிபுத்தூர் - ஆயாத்தோட்டம் வழியாக வாய்க்காலில் கரையினை ஓட்டிய சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பன்றி குறுக்கே வந்ததை கண்டு திடீரென பிரேக் போட்டுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த மோகனரங்கனை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் வாகனத்தின் மூலம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!