பவானி அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

பவானி அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
X

உயிருடன் மீட்கப்பட்ட பசுமாடு.

பவானி அருகே காடப்பநல்லூரில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் பவானி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் பாப்பன்தோட்டத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 70 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

இந்த கிணற்றின் அருகே விவசாய நிலத்தில் சேகர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். கிணறு அருகே மேய்ந்து கொண்டிருந்த மாடு எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பவானி தீயணைப்பு துறையினர் கிணற்றில் தவறி விழுந்த மாட்டை கயிற்றின் மூலம் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் பொதுமக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!