ஈரோட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஈரோட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சுரேஸ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம். உடன், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட உள்ளனர்.

ஈரோட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 8ம் தேதி) நடைபெற்றது.

ஈரோட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 8ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், கல்வி உதவித்தொகை மற்றும் கடன் உதவிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 8ம் தேதி) நடைபெற்றது. கூட்டத்திற்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் கல்வி உதவித்தொகை மற்றும் கடன் உதவிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை மேற்கொண்டு, டாப்செட்கோ திட்டத்தின் கீழ் 2024-2025 நிதியாண்டிற்கான இலக்கினை எட்டிட கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் காலிதாபானு, தனி வட்டாட்சியர் (நிலமெடுப்பு) இளஞ்செழியன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் (பெருந்துறை கிளை) மோகனாம்பாள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story