பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதில் அறுவை சிகிச்சை அரங்குகள், எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், பிரசவ அறை, தாய்ப்பால் வங்கி, தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, அவசர அறுவை அரங்கு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆய்வகம், பணி மருத்துவர்கள் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, அவசர சிகிச்சை பிரிவு, செயற்கை சுவாச கருவி அறை, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பிரிவு, கழிவறை, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான நோயாளிகள் நலச் சங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான தார் சாலை வசதி, மின் விளக்கு வசதி போன்றவற்றை தன்னார்வலர்கள் திட்டம் மூலம் செயல்படுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட கல்லூரியின் முதல்வர் மரு.டி.ரவிக்குமார், துணை முதல்வர் மரு.ஆர்.டி.புவிதா, மருத்துவ கண்காணிப்பாளர் (பொ) மரு.செந்தில் செங்கோடன், உறைவிட மருத்துவ அலுவலர் மரு.பி.டி. ராணி மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu