ஈரோடு: அத்தாணியில் மருத்துவ அலுவலர், கிராம சுகாதார செவிலியரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல்; தம்பதி மீது போலீசில் புகார்!

அத்தாணியில் மருத்துவ அலுவலர், கிராம சுகாதார செவிலியரை செல்போனில் அவதூறகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தம்பதி மீது ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையம் நேற்று வந்தனர். அவர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனிடம் புகார் மனு கொடுத்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, கிராம சுகாதார செவிலியர்கள் களப்பணிகளுக்காக, கிராம பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி, உரிய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தேவைப்படும் சிகிச்சைகள் மேற்கொண்டு அவர்களை பராமரிப்பது ஆகும்.
மைலும், அவ்வாறு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏதேனும் சிக்கலான உடல் பிரச்சனைகள் கண்டறியப்பட்டால் மருத்துவரின் பரித்துரைப்படி, அவர்கள் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், அத்தாணி பெருமாபாளையம் பகுதியில் வசித்து வரும் குணா என்பவரின் மனைவி கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, கிராம சுகாதார செவிலியர் வெற்றிசெல்வி அந்த கர்ப்பிணிக்கு மேற்கொண்ட பரிசோதனை அறிக்கையை பார்த்த போது சிக்கலான உடல் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, அவரை கடந்த 5-ந் தேதி அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் குணா ஆகியோர் வந்தனர்.
அங்கு, அந்த கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்த பிறகு, ரத்த பரிசோதனை செய்ய கூறிய போது, குணா அங்கிருந்த கிராம சுகாதார செவிலியரை தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு சென்று விட்டார். இந்நிலையில், கடந்த 16-ந் தேதி பணியில் இருந்த மருத்துவ அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்ட குணா அவரை தகாத வார்த்தைகளால் பேசினார்.
தொடர்ந்து, கிராம சுகாதார செவிலியரை தொடர்பு கொண்ட குணா அவரையும் அவதூறகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, கிராம சுகாதார செவிலியரை அவதூறகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததற்கும், மருத்துவ அலுவலரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதற்கும், தம்பதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu