ஆப்பக்கூடல் அருகே மளிகை கடையில் குட்கா விற்ற பெண் மீது வழக்குப்பதிவு

ஆப்பக்கூடல் அருகே  மளிகை கடையில் குட்கா விற்ற பெண் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

ஆப்பக்கூடல் அருகே கூத்தம்பூண்டி ரைஸ்மில் பிரிவில் மளிகை கடையில் குட்கா விற்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ரைஸ்மில் பிரிவு பகுதியில் ஆப்பக்கூடல் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, கூத்தம்பூண்டி - வெள்ளாள பாளையம் சாலையில் உள்ள மளிகை கடையில் குட்கா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளரான தீபா (35) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 180 ரூபாய் மதிப்புள்ள 6 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!