அந்தியூரில் நள்ளிரவில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது!
அந்தியூரில் நள்ளிரவில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தாமரைக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராஜ். இவரது மனைவி மாதேஸ்வரி (வயது 23). இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மாதேஸ்வரிக்கு இன்று (ஜன.13) நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது.
இதுகுறித்து உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பர்கூர் ஓசூர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணி மாதேஸ்வரியை ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் அருகே சென்ற போது மாதேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமானது. நிலைமையை புரிந்து கொண்ட டிரைவர் குமரேசன் ஆம்புலன்சை நிறுத்த, அவசர கால மருத்துவ நுட்புணர் சிவா பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் இன்று (ஜன.13) நள்ளிரவு 2.05 மணிக்கு மாதேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து, தாயும் - சேயும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஓடும் ஆம்புலன்சில் திறம்பட செயல்பட்டு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுகளை மாதேஸ்வரியின் உறவினர்கள் மற்றும் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கவின் ஆகியோர் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu