ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்ல பேட்டரி கார் வசதி அறிமுகம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேட்டரி காரை படத்தில் காணலாம்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை கொண்டு செல்ல போதிய வசதி இல்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணை அவருடைய மகள் தூக்கிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் நோயாளிகளை கொண்டு செல்ல போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக, தனியார் நிறுவனம் மூலம் பேட்டரி கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்லலாம். நோயாளிகளை அவசர சிகிச்சை பிரிவு, பிற வார்டுகள், புதிய கட்டிடத்தில் சிகிச்சை அறைகளுக்கும் அழைத்து செல்ல இந்த வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. நடந்து செல்ல இயலாத நோயாளிகள், அவருடன் வரும் ஒருவரும் அனுமதிக்கப்படுவர். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu