ஈரோட்டில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி

ஈரோட்டில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி
X
ஈரோட்டில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலியானது.

ஈரோட்டில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலியானது.

பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியை சேர்ந்தவர் மீராஜ் ஆலோம். இவர் ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வருகிறார். இவருடைய மனைவி நாசினி காத்தூன். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களுடைய 2-வது மகன் தவுகீர் (வயது 3) வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்து விட்டான்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தவுகீர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai solutions for small business