அந்தியூரில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

அந்தியூரில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அக்காவின் காதல் திருமணத்தால் மனஉளைச்சல் அடைந்த 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்தியூரில் அக்காவின் காதல் திருமணத்தால் மனஉளைச்சல் அடைந்த 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். அவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர் தர்மபுரி ஏமனூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இவர்களுடைய மகள் தேவதர்ஷினி (வயது 15). இவர் கொல்லபாளையத்தில் பாட்டி சின்னத்தாயுடன் தங்கி அந்தியூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தேவதர்ஷினியின் அக்காள் சித்தப்பா முறையுள்ள நபரை காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், தேவதர்ஷினி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சின்னத்தாயி அந்த பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டார். வீட்டில் தேவதர்ஷினி தனியாக இருந்தார். திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த சின்னத்தாயி கதவை தட்டிப்பார்த்துள்ளார்.

ஆனால், திறக்கவில்லை. உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தேவதர்ஷினி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story