கோபி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழப்பு: பொதுமக்கள் பீதி

கோபி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழப்பு: பொதுமக்கள் பீதி
X

மர்ம விலங்கு கடித்ததில் ஆடுகள் உயிரிழந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரில் மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் உயிரிழந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் அருகே உள்ள அயலூர் எல்லப்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 55). இவர் விவசாயம் செய்து வருவதோடு, 7 ஆடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (27ம் தேதி) இரவு தனது வீட்டின் அருகே உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இன்று (28ம் தேதி) காலை சென்று பார்த்தபோது, ஆடுகள் அனைத்தும் கழுத்துப் பகுதியில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தன.

மேலும், அருகில் உள்ள விஜயகுமார், பாப்பாத்தி ஆகியோரின் 2 ஆடுகளும் கழுத்துப் பகுதியில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தது. இதனால், அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேலுக்கும், கொளப்பலூர் கால்நடை மருத்துவர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து, இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil