சத்தியமங்கலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
மாணவி மவுனிகா.
Erode Live Updates, Erode Live News, Erode Today News - சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் டெங்கு காய்ச்சலுக்கு 8ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி அருகே உள்ள ஜீரகள்ளி கிராமத்தைஞ் சேர்ந்தவர் சிவப்பா. இவரது மனைவி பெயர் வனஷாக்ஷி. இவர்களுடைய ஒரே மகள் மவுனிகா (வயது 13). மவுனிகா பனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் மவுனிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.22) உயிரிழந்தார். 8ம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu