ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழ் தேர்வில் 873 பேர் ஆப்சென்ட்

ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழ் தேர்வில் 873 பேர் ஆப்சென்ட்
X

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகள்.

ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் நாள் தமிழ் தேர்வில் 873 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் நாள் தமிழ் தேர்வில் 873 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தோ்வு 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் 8ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கியது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த, 25 ஆயிரத்து 663 மாணவ, மாணவியர், 1,159 தனித்தேர்வர்கள் என, 26 ஆயிரத்து 822 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த தேர்வுப் பணியில் 1,340 ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டனர். மேலும், தேர்வு எழுத முடியாத மாணவ, மாணவிகளுக்காக அவர்கள் சொல்வதை எழுதும் ஸ்கிரைபர்ஸ் எனும் தேர்வு எழுதுபவர்கள் 600க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு ஈரோடு மாவட்டத்தில் 116 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இன்று தொடங்கிய பொதுத்தேர்வில், மொழி பாடமான தமிழ் தேர்வு நடந்தது. இதில், 25 ஆயிரத்து 949 பேர் மட்டுமே பங்கேற்றனர். 873 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!